அர்ஜென்டீனாவில் பிரித்தானியர்களுக்கு நேர்ந்த கொடூரம்... மார்பில் குண்டுடன் மகன் கண் முன்னே துடித்த தந்தை: சிசிடிவி காட்சி

Report Print Basu in பிரித்தானியா

தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டீனாவில் பிரித்தானியா சுற்றுலா பயணி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் புவெனஸ் அயர்ஸில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலுக்கு வெளியே காலை 11 மணியளவில் 50 மற்றும் 28 வயதுடைய ஆண்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நகரின் புவேர்ட்டோ மடிரோ மாவட்டத்தில் உள்ள ஃபீனா ஆர்ட் ஹோட்டலின் நுழைவாயிலுக்கு அருகே கொள்ளையர்களுடனான சண்டையில் தாக்கப்பட்ட இருவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் சுற்றுலாப் பயணிகளின் உடமைகளைத் திருட முயன்றுள்ளனர், பிரித்தானியார்களான தந்தையும், மகனும் அவர்களை எதிர்த்துள்ளனர். இறுதியில் துப்பாக்கியால் சுட்டு சம்பவயிடத்தை விட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

பின்னர் பிரித்தானியர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. மார்பில் சுடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட தந்தை மருத்துவமனையில் இறந்தார், மகன் தொடையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளுர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு தாக்குதல்காரர்களால் பிரித்தானியர்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அருகிலேயே தப்பிச்செல்ல வாகனம் வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: புவெனஸ் அயர்ஸில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு பிரிட்டிஷ் ஆண்களின் குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம், மேலும் அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்