நடைபாதையில் அனாதையாக கிடந்த பிரித்தானியரின் சடலம்: வெளியான துயர சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபாதை ஒன்றில் சுமார் மூன்றரை மணி நேரம் கேட்பாரற்று கிடந்த சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

கிரிம்ஸ்பி, லிங்கன்ஷயர் பகுதியில் பகுதியில் உள்ள நடைபாதை ஒன்றில் 45 வயது மதிக்கத்தக்க குடியிருப்பற்ற நபர் தடுமாறி விழுந்து கிடந்துள்ளார்.

காலை 10 மணியளவில் விழுந்த அவரை, அதுவழியாக கடந்து சென்ற எவரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

போதை மருந்து அதிகமாக பயன்படுத்தியதாலையே அவர் தடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுமார் 1.30 மணியளவிலேயே அவரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

புதனன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்தபோது இப்பகுதியில் வெப்பநிலை 5C-கும் குறைவாக இருந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Mummery என அறியப்படும் அந்த நபர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண் ஒருவர், இவரை அடையாளம் கண்டு உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகமாக போதை மருந்து மற்றும் மதுவுக்கு அடிமையானர்வர் இந்த Mummery என கூறப்படுகிறது.

இதனாலையே அவர் விழுந்து கிடப்பதை கண்டும் பெரும்பாலனவர்கள் கடந்து சென்றிருக்கலாம் என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்