Alexaவை படுக்கையறைக்குள் அனுமதிக்காதீர்கள்: நிபுணரின் ஆலோசனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

Alexa என்னும் குரல் மூலம் இயங்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அது மனிதர்களின் அந்தரங்கங்களுக்குள் தலையிடுவதாக புகார்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் கணவனும் மனைவியும் தங்கள் படுக்கையறையில் பேசிக்கொண்ட விடயங்களை பதிவு செய்து வேறொருவருக்கு அனுப்பியது ஒரு கருவி.

அந்த நபர் ஏற்கனவே அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என்பதால், உடனடியாக அவரை எச்சரித்தார்.

ucl.ac.uk

நல்ல வேளையாக தம்பதியினர் அந்தரங்கமாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், அப்படி அந்தரங்கமாக பேசும் விடயங்களைக் கூட, அக்கருவியை கட்டுப்படுத்தும் நிறுவனங்களில் உள்ளவர்கள் ஒட்டுக்கேட்பதாகவும் சிறிது காலத்திற்கு முன் புகார் எழுந்தது.

இந்நிலையில் தனியுரிமை நிபுணரான Dr Hannah Fry (35)என்பவர், இத்தகைய அசௌகரிய நிகழ்வுகளைத் தவிர்க்க ஒரு எளிய ஆலோசனையைக் கூறியுள்ளார்.

நான் அலெக்சாவை எனது படுக்கையறையில் வைப்பதில்லை என்கிறார் அவர். எனது படுக்கையறை மாடியில் உள்ளது, அலெக்சாவை நான் மாடியில் அனுமதிப்பதே இல்லை, கீழ் அறைகளிலேயே வைத்துவிடுகிறேன் என்கிறார் அவர். நல்ல ஆலோசனைதானே!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்