லண்டனில் வெடிக்காத 2 உலகப்போர் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் செல்சியா பகுதி அருகே, உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள டைட்வே திட்ட கட்டுமான தளத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், உலகப்போரின்போது வெடிக்காமல் இருந்த 2 குண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்த பொலிஸார், Chelsea Bridge, Chelsea Bridge Road, Albert Bridge மற்றும் Battersea Bridge உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு ஒரு வளைவு வைக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றியுள்ள பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விரைவில் குண்டுகளை செயலிழக்க வைப்பதற்கான பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்