பிரித்தானியாவின் இளம் எம்.பி. எடுத்துள்ள முடிவு: குவியும் பாராட்டு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

தொழிலாளர் கட்சி சார்பில் வெற்றிபெற்ற பிரித்தானியாவின் இளம் எம்.பி.களில் ஒருவரான Nadia Whittome எடுத்துள்ள முடிவு பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

பிரித்தானியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 365 இருக்கைகளுடன் அசுர வெற்றிபெற்றுள்ளது.

எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி 203 இருக்கைகளுடன் வெற்றிவாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற 23 வயதேயான பிரித்தானியாவின் இளம் எம்.பி Nadia Whittome தமது ஆண்டு ஊதியத்தில் பெரும்பங்கை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டுக்கு 79,468 பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதில் 35,000 பவுண்டுகள் மட்டுமே தாம் கைப்பற்ற இருப்பதாகவும் Nadia Whittome அறிவித்துள்ளார். எஞ்சிய தொகையை Nottingham charities என்ற நிறுவனத்திற்கு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

(Image: Tom Maddick SWNS)

பிரித்தானியாவில் செவிலியர்களுக்கும் தீயணைப்பு குழுவினருக்கும் மாத ஊதியத்தை அரசு அதிகரிக்கும் வரை தாமும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மட்டுமே பெற இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

தமது முடிவானது பரோபகாரம் தொடர்பானது அல்ல மட்டுமின்றி எம்.பி.க்கள் அந்த சம்பளத்திற்கு தகுதியற்றவர்கள் என சுட்டிக்காட்டுவதற்காகவும் அல்ல. ஆனால் எங்கள் உதவி ஆசிரியர்களும், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் பெற வேண்டிய ஊதிய உயர்வு கிடைக்கும்போது, நானும் எனக்கான முழு ஊதியத்தையும் பெறுகிறேன்.

இந்த முடிவானது பிரித்தானியாவில் ஊதியம் தொடர்பான கலந்துரையாடலை தூண்டும் என்று நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களுடைய அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கான தொகை, அலுவலக ஊழியர்களுக்கான ஊதியம், பாராளுமன்றத்திற்கும், அவரது தொகுதிக்கும் சென்று வருவதற்கான கட்டணம் என அனைத்தும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலவு செய்யப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்