போரிஸ் ஜான்சனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை: பின்னணி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு இறுதியில் தான் விரும்பும் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமானால், அவர் பிரெக்சிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்ல உறவை தொடரவேண்டும் என அதன் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரியோ ஒதுக்கீடோ இல்லாத ஒப்பந்தம் ஒன்றை 2020-ன் இறுதி வாக்கில் நிறைவேற்ற விரும்பும் போரிஸ் ஜான்சன், அதற்கான விலையை செலுத்தியாக வேண்டும் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை விதிகளுடன் ஒத்துப்போவதுதான் அதற்கான விலை என்று கூறியுள்ளனர்.

பிரஸ்ஸல்ஸில் நடந்த இரண்டு நாள் உச்சி மாநாடு ஒன்றின் இறுதியில் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள், போரிஸ் ஜான்சனின் அபார வெற்றிக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

இந்த வெற்றி, போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்வதாக தான் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நிச்சயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்கால உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டுமானால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் போரிஸ் ஜான்சன் சமாதானமாக போக வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய தரக்கட்டுப்பாடுகளிலிருந்து அதிகம் மாறுபட முயலும் என்றால், பிரித்தானிய பொருட்கள் மீது வரிகள் விதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்றார்.

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறும்போது, பிரித்தானியா நமக்கே போட்டியாளராக மாறுவதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் எல்லாவற்றையும் செய்யும் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்