பிரித்தானியா தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கையர் வெளியிட்ட முக்கிய பதிவு! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட ரனில் ஜெயவர்த்தனே மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள நிலையில், தன்னுடைய டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் North East Hampshire தொகுதியில் கன்சர்வெடிவ் கட்சியை சேர்ந்த Ranil Jayawardena போட்டியிட்டார். இதையடுத்து நேற்று நள்ளிரவில் இருந்து முடிவு வெளியான நிலையில், Ranil Jayawardena வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து Ranil Jayawardena தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நேற்று நடைபெற்ற முடிந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இது நீங்கள் எனக்கும் கொடுத்திருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு, இந்த தேர்தலில் எனக்கு வாக்களிக்காதவர்களுக்கு என்னுடைய திறமையை நிரூபிப்பேன்.

நான் கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலின் போதும் இதே போன்ற வெற்றியை தான் பெற்றேன், உள்ளூர் பிரச்சனைகள் பற்றி பேசுவேன், கன்சர்வேடிவ்கள் பிரக்சிட் செய்து முடிக்க வேண்டும், நம் நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விருப்ம்புவதை இந்த தேர்தல் மூலம் மக்கள் காட்டியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் Ranil Jayawardena 35,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் Liberal Democrats கட்சியும், மூன்றாவது இடத்தை தொழிலாளர் கட்சியும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்