பிரித்தானியாவில் வாக்குப்பதிவு நிறைவு... யாருக்கு வெற்றி? வெளியான கருத்துகணிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் பொது தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூசின் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி நடைபெற்றது. இதில் ஒரு சிலர் வாக்களிப்பதற்கு பதிவு செய்தும் வாக்களிக்க முடியாமல் போனதாகவும், ஒரு சிலர் கடைசி கட்டத்தில் இரவு 10 மணிக்குள் வந்து வாக்களித்தனர்.

சிலர் 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருந்து வாக்களித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து தற்போது வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. அதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி 86 இடங்களில் பெரும்பான்மையுடன் வெல்வார்கள் என்று கணித்துள்ளது.

கன்சர்வேடிவ்கள் 368 இடங்களை வெல்லும் எனவும் கடந்த 2017 தேர்தலுடன் ஒப்பிடும் போது இது 50 இடங்கள் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று தொழிலாளர் கட்சி 191 இடங்களிலும், Lib Dems 13, Brexit Party(0) மற்றும் SNP 55 இடங்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers