பிரித்தானியா தேர்தல்... மிகவும் மோசமான வாக்கு சாவடி இது தான்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாக்களிப்பதற்கும் இன்னும் ஒரு மணி நேரமே உள்ளதால், மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவிட்டு வரும் நிலையில், நாட்டின் மிகவும் மோசமான வாக்குச்சாவடி இது தான் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பிரித்தானியாவின் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தங்களின் கடமையை ஆற்ற மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

(Image: Huddersfield Examiner)

இன்னும் வாக்களிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளதால், மக்களின் கூட்டம் அலைமோதுவதாகவும் ஒருவர் வாக்களிக்க வேண்டும் என்றால் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக வாக்களித்தவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக தெற்கு லண்டனின் Balham பகுதியில் இருக்கும் தேவாலய வாக்குச்சாவடியில் ஒரு நீண்ட வரிசையில் மக்கள் நிற்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

(Image: Huddersfield Examiner)

மேலும் வாக்களிப்பதற்கு இரவு 10 மணிக்குள் வாக்களர்கள் வந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், அப்படி நேரம் தவறினால் அவர்கள் அனுமதிக்கப்படாமாட்டார்கள் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதே போன்று வாக்குப்பதிவு முடிந்த சில நிமிடங்களிலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு பிரித்தானியா தேர்தலில் மிகவும் மோசமான வாக்குச்சாவடி என்றால் அது West Yorkshire-ன் Huddersfield-ல் இருக்கும் வாக்குச்சாவடி என்று கூறி, அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ஏனெனில் இது ஏதோ வாக்குச்சாவடி போன்று இல்லை, ஏதோ இப்போதைக்கு என்று வைக்கப்பட்டது போன்று உள்ளது. அது ஒரு உறுதியாக இல்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

(Image: Huddersfield Examiner)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்