நேரலையில் தேர்தல் குறித்து பத்திரிகையாளர் வெளியிட்ட தகவல்: சட்டத்தை மீறியதாக சர்ச்சை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தேர்தல் குறித்து வெளியிட்ட தகவல் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தேர்தல் விதி எதையும் மீறவில்லை என அவர் சார்ந்த தொலைக்காட்சி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

இந்த சர்ச்சைக்கு காரணமானவர் BBC தொலைக்காட்சியின் political editorஆன Laura Kuenssberg (43)தான்.

நேரலை நிகழ்ச்சி ஒன்றின்போது, தனது காரின் பின் இருக்கையில் அமர்ந்தபடி பேசிய அவர் தபால் வாக்குகள் வந்துவிட்டன.

இரண்டு கட்சியினருமே நாட்டின் பல பகுதிகளிலும் லேபர் கட்சி பின் தங்கியிருப்பதாகவே தெரிவித்துள்ளன.

பெரும்பாலான தபால் வாக்குகள் வயதானவர்களாலேயே அளிக்கப்படும் நிலையில், லேபர் கட்சியைப் பொருத்தவரையில், இளைஞர்கள் அதன் பக்கம் சாய வாய்ப்புள்ளது என்பதால், நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

எனவே இந்த தேர்தலைப் பொருத்தவரை, நம்மால் எதையும் கணிக்கமுடியாது என்றார் அவர்.

இந்த விடயம் இடது சாரியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரமின்றி Kuenssberg லேபர் கட்சிக்கு எதிராக பேசியிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜெரமி கார்பினின் ஆதரவாளர்கள், Kuenssberg Representation of the People Act என்னும் சட்டத்தை மீறியிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

Representation of the People Act சட்டத்தின்படி, இன்று இரவு 10 மணிக்கு வாக்கெடுப்பு முடியும் முன், மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதைக் குறித்து தகவல் தெரிவிப்பது தடை செய்யப்பட்ட விடயமாகும்.

இதுபோக, இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியான சிறிது நேரத்தில், தேர்தல் கமிஷன் ட்வீட் ஒன்ரை வெளியிட்டது.

அதில், வாக்கு எண்ணிக்கை முடியும் முன், தபால் வாக்குகள் குறித்து தகவல் எதையும் வெளியிடுவது குற்றமாக இருக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு விடயம் நடந்ததாக யாரிடமாவது ஆதாரம் இருந்தால், உடனடியாக பொலிசாரிடம் புகார் தெரிவிக்கவும் என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் BBC செய்தி தொடர்பாளர் ஒருவர், தொலைக்காட்சியோ அல்லது அதன் அரசியல் பிரிவு ஆசிரியரோ தேர்தல் விதியை மீறியதாக தாங்கள் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers