லண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்! சிசிடிவி புகைப்படங்கள் வெளியானது

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் இரயில் 13 வயது சிறுமி கடைசியாக கடந்த 5ஆம் திகதி காணப்பட்ட நிலையில் அவரை நினைத்து பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Bedfordshireன் Sandy நகரை சேர்ந்தவர் அட்லாண்டா பட்லர் (13). இவர் கடந்த ஐந்தாம் திகதி பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில் பின்னர் மாயமானார்.

அட்லாண்டா உள்ளூர் நேரப்படி ஐந்தாம் திகதி காலை 10.56 மணிக்கு லண்டன் செல்லும் இரயிலில் ஏறி உட்கார்ந்திருக்கும் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அப்போது கையில் கருப்பு நிறத்தில் பை ஒன்றை அட்லாண்டா வைத்திருந்தார். இதோடு அவரின் மேலும் சில சிசிடிவி புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அட்லாண்டா 8 நாட்களாக காணாமல் போயுள்ளதால் அவர் பெற்றோர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

அட்லாண்டா தந்தை மார்ட்டின் கூறுகையில், அட்லாண்டா நீ பத்திரமாக இருக்கிறாய் என்ற தகவலை மட்டும் எங்களிடம் கூறிவிடு, உன்னை நினைத்து நாங்கள் பெரிதும் கவலையில் உள்ளோம் என கூறியுள்ளார்.

அட்லாண்டா பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு Milton Keynes-ல் உள்ள நண்பரை காண சென்றிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

Bedfordshire Police

Sandyல் இருந்து Milton Keynes-க்கு நேரடி இரயில் கிடையாது என்பதால் லண்டன் இரயில் மூலம் அங்கு சென்றிருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையில் அட்லாண்டா குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Bedfordshire Police
Bedfordshire Police

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers