மிக நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் பிரித்தானியர்கள்: பிரதமர் போரிஸ் ஜான்சனும் வாக்கை பதிவு செய்தார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வரும் நிலையில், தனது நாயுடன் வந்த பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

சில தொகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் புகைப்படங்களை மக்கள் ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

Battersea என்ற இடத்தில் வாக்களிக்க காத்திருக்கும் டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவரான Steven Swinford வெளியிட்டுள்ள ட்வீட்டில், தனக்கு முன் நூற்றுக்கு மேலானோரும், தனக்குப்பின் 50க்கு மேலானோரும் நிற்பதாக தெரிவித்து, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள Methodist Central Hallக்கு தனது செல்ல நாய் Dilynஉடன் வந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வாக்கைப் பதிவு செய்தார். (ஆனால் அவருடன் அவரது காதலி வந்ததாகத் தெரியவில்லை).

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்