பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: ஜெரமி கார்பின் வெளியிட்டுள்ள செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019க்கான வாக்குப்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், லேபர் கட்சித் தலைவரான ஜெரமி கார்பின் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேரடியாக எதுவும் பேசாமல் மறைமுகமாக கன்சர்வேட்டிவ் கட்சியினரின் ஆட்சிக்காலத்தில் மருத்துவத்துறை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவரது ட்வீட் வெளிப்படுத்துகிறது.

அந்த ட்வீட்டில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பிரித்தானியாவின் மருத்துவத்துறையான NHSஇன் மோசமான நிலையை விளக்கும் மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் லேபர் கட்சிக்கு வாக்களிக்க கோருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று தரையில் படுக்கவைக்கப்படிருந்த படத்தைப் பார்க்க மறுத்து, அதைக் காட்டியவரின் மொபைல் போனை பிடுங்கும் போரிஸ் ஜான்சனை கேள்வி கேட்கும் காட்சியும் அதில் உள்ளது.

அரை மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் காக்கவைக்கப்பட்ட விடயத்தையும், 4.4 மில்லியன் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் விடயத்தையும் நினைவுபடுத்தி, 9 ஆண்டுகள் ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் கையாலாகாத்தனத்தை சுட்டிக்காட்டி, இன்னொரு ஐந்து ஆண்டுகள் போரிஸ் ஜான்சன் ஆட்சியின் கீழ் நாடு இருந்தால் என்ன ஆகும் என்று மருத்துவத்துறையினரே கேள்வி கேட்பது போல் அமைந்துள்ளது அந்த வீடியோ.

இன்று லேபர் கட்சிக்கு வாக்களித்து, மருத்துவத்துறையை காப்பாற்றுங்கள் என்கிறார்கள் வீடியோவில் இடம்பெற்றுள்ள மருத்துவத் துறையினர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...