என்னுடைய எள்ளு பாட்டி தமிழகத்தை சேர்ந்தவர்: மரபணு சோதனை செய்த பிரித்தானிய தொழிலதிபர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தன்னுடைய எள்ளு பாட்டி தமிழகத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.

விர்ஜின் அட்லாண்டிக் என்கிற பிரித்தானிய விமான சேவையின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன், டிசம்பர் 11 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தன்னுடைய மூதாதையர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிச்சர்ட் பிரான்சன், 1793 முதல் நான்கு தலைமுறைகளாக நாங்கள் இந்தியாவில் வசித்து வந்தோம். ஆனால் எங்களுக்கும், இந்தியாவிற்குமான தொடர்பு எவ்வளவு வலிமையானது என்பது எனக்கு தெரியாது.

இதற்காக நான் மரபணு சோதனை மேற்கொண்ட போது, எனது உடலிலும் இந்திய இரத்தம் ஓடுவது தெரியவந்தது. என்னுடைய எள்ளு தாத்தா, தமிழகத்தில் கடலூரை சேர்ந்த அரியா என்பவரை திருமணம் செய்திருந்துள்ளார். அவர்தான் என்னுடைய எள்ளு பாட்டி எனக்கூறியுள்ளார்.

மேலும் பழங்காலத்தில் எடுக்கப்பட்ட தன்னுடைய எள்ளுப்பாட்டியின் படம் சமீபத்தில் கிடைத்ததாகவும், அதனை பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானத்தில் நினைவாக வைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...