பிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: வாக்குப்பதிவு துவங்கியது!

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியா பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி இன்றுகாலை 7மணிக்கு துவங்கியது.

பிரித்தானியாவில், பொதுத்தேர்தல் இன்றை தினம் நடைபெற உள்ள நிலையில், நாளை முடிவுகள் அறிவிக்கப்படும்.

மாலை 10மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்தது வாக்கு எண்ணிக்கை துவங்கும்.

வாக்களிக்க இருப்பவர்கள், GOV.UKஎன்ற இணையதளத்தில், உங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்று சரிபார்த்து கொள்ளலாம்.

3321 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில், ஆளுங்கட்சி வெற்றி பெறுமா என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாக்காளர்கள், வாக்கு சீட்டு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாக்கு சாவடியில் பெயர் முகவரி வழங்கினாலே போதுமானது.

மேலும், வாக்காளர்கள் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இல்லை எனில், அந்த வாக்கு பதிவு செல்லாததாகிவிடும்.

வழக்கமாக தேர்தலில், இளையோர்களை விட முதியவர்கள் அதிகம் வாக்களிப்பதால் இந்த தேர்தலிலும் அந்த நிலை நீடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் முன்னதாக கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...