பிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: எண்களின் அடிப்படையில் தேர்தல் விவரம்

Report Print Abisha in பிரித்தானியா

இன்று காலை 7மணிக்கு துவங்க உள்ள பிரித்தானிய தேர்தலில், எண்கள் அடிப்படையிலான சில தகவல்கள் பார்க்கலாம்.

650

இந்த பொதுத்தேர்தலில், 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடங்களில் எம்.பிகள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

இதில், 533 தொகுதிகள் இங்கிலாந்திற்கு உட்பட்டதாகவும், 59தொகுதிகள் ஸ்காட்லாந்திற்கு உட்பட்டதாகவும், 40 தொகுதிகள் வேல்ஸ்க்கு உட்பட்டதாகவும், 18 தொகுதிகள் வட அயர்லாந்திற்கு உட்பட்டதாகவும் உள்ளது.

இதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 635தொகுதிகளில் போட்டியிடுகின்றது. தொழிலாளர் கட்சி 631தொகுதிகளிலும், பிரெக்ஸிட் எதிர்ப்பு லிபரல் ஜனநாயகவாதிகள் கட்சி 611 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

3321
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தல் நிர்வாக சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில், 1,124 பெண்களில் 227 பெண்கள் மட்டுமே சுட்சை வேட்பாளர்களாக உள்ளனர்.

12

அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாகUxbridge மற்றும் South Ruislip தொகுதிகள் உள்ளன.

பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது தொகுதியை தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10க்கும் மேற்பட்டோர் போட்டியிடும் தேர்தலும் இதுதான்

5,034

போரிஸ் ஜான்சன் தான் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள முதல் பிரதமர். அவர் தோற்றடிக்கப்பட்டால் பிரதமராக இருந்து தோற்கும் முதல் நபராக இருப்பார்.

40,000+

இந்த தேர்தலில் 40,000க்கும் அதிகமான வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சரியான புள்ளி விவரங்கள் இல்லை.

2015ஆம் ஆண்டு 40,100 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

8,700

இந்த அளவு பவுண்ட்கள் செலவு செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதில், சிறிய அளவில் மட்டுமே அதிகம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

500

இந்த அளவு பவுண்ட்கள் வேட்பாளர்கள் டெபாசிட்டாக வழங்கியுள்ளனர்.

அவர்கள் 5 சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றால் அந்த பணம் திருப்பி அவர்களுக்கு வழங்கப்படும்.

18

18வயத்திற்கு மேற்பட்ட யாரானாலும், இந்த தேர்தலில் போட்டியிட முடியும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers