லண்டனில் டெலிவரி கொடுக்க வந்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்.. சிசிடிவி கமெராவில் கண்ட காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அமேசான் டெலிவரி டிரைவர் ஒருவர், டெலிவரி செய்யும் போது அதில் இருந்த கண்ணாடி பொருட்களை உடைத்து, கால்களால் மிதித்து அங்கிருக்கும் வீட்டின் கடிதப் பெட்டியில் போட்டுவிட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Grays-ல் இருக்கும் நபர் அமேசான நிறுவனத்தில் கண்ணாடியால் ஆன பொருள் ஒன்றை ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பொருளை கொண்டு வந்த அமேசான் டெலிவரி டிரைவர், அந்த வீட்டில் இருக்கும் கடிதப் பெட்டியில் வைக்க முயன்றுள்ளார். ஆனால் அது முடியாமல் போக, டெலிவரியின் உள்ளே இருப்பது என்ன என்று கூட தெரியாமல், அதை மடித்து, உடைத்து, காலால் மிதித்து அதன் பின் உள்ளே போட்டுவிட்டு செல்கிறார்.

இது எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாக, உடனே அந்த நபர் இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அமேசான் யூகே நேற்றிரவு நான் என் பார்சலை திறந்து பார்த்த போது, நான் கண்டது இது தான், தூள் தூளாக நொறுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் டெலிவரி கொடுக்க வரும் நபருக்கு எப்படி பார்சலை கொடுக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்க வேண்டும் என்று நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு குறிட்த நிறுவனம், உங்களின் பொருள் சேதமடைந்ததைக் கேட்டு நாங்கள் வருந்துகிறோம், இது நிச்சயமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் எதிர்பார்ப்பது இல்லை.

உங்கள் ஆர்டர் விவரங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள், இந்த விஷயத்தை பற்றி கூறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்