இரவு நேரம் சாலையில் பிரித்தானிய இளம் பெண்ணுக்கு நேர்த்த துயரம்: அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் நேற்றிரவு பரபரப்பான சாலையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 13 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் வெலிங்பரோ சாலை, ருஷ்டன், நார்தாம்ப்டன்ஷைர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் நடந்துள்ளது.

25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது 13 வயது சிறுவன் மற்றும் 27 வயது இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் ஒரு 27 வயது இளைஞரை கொலை முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மூவரும் பொலிஸ் விசாரணையில் உள்ளனர்.

தாக்குதலுக்கு இரையான இளம்பெண், சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண்ணின் மரணம் மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்துள்ள நார்தாம்ப்டன்ஷைர் பொலிஸ் தலைவர், இந்த விவகாரம் தொடர்பில் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் எனவும் உறுதி அளித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று அமைத்துள்ளதாகவும், அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவமானது ருஷ்டன் பகுதி மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொலை தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்