சேலையில் மிடுக்காக வந்த பிரித்தானிய பிரதமரின் காதலி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தன்னுடைய காதலியுடன் இந்துக்கோவிலுக்கு சென்றுள்ளார்.

பிரித்தானிய பொதுத்தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான வாக்குசேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டோரிகள் இப்போது 44 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளனர், தொழிற்கட்சி 33 புள்ளிகளிலும், லிப் டெம்ஸில் 11 புள்ளிகளிலும் பின்தங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 55 வயதான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது காதலி கேரி சைமண்ட்ஸ் உடன் சனிக்கிழமையன்று லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமநாராயண் கோவிலுக்கு விஜயம் மேற்கொண்டார். நவம்பர் 6 ம் திகதிக்கு பிறகு வெளியில் தோன்றாமல் இருந்த கேரி சைமண்ட்ஸ், கண்கவரும் சேலையில் வருகை தந்திருந்தார்.

அங்கு இருவரும் பிராத்தனை செய்ததோடு, வழிபாட்டாளர்களையும், இந்திய புலம்பெயர்ந்த உறுப்பினர்களையும் சந்தித்தனர்.

இருவருக்குமிடையேயான உறவு குறித்து பல்வேறு கேள்விகள் இருந்தபோதிலும், இருவரும் மகிழ்ச்சியுடனே காணப்பட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்