7 வருடத்துக்கு முன்னர் கர்ப்பத்தை கலைத்த லண்டன் இளம்பெண்! தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த நடிகை ஜமீலா தனது வயிற்றில் இருந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ததால் பல்வேறு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், நான் இப்போது வாழ்க்கையில் பெரிதாக ஜெயித்துவிட்டேன் என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

லண்டனை சேர்ந்த ஜமீலா ஜாமில் (33) பிரபல நடிகையாக உள்ளார். இவர் 7 வருடங்களுக்கு முன்னர் கர்ப்பமான நிலையில் தனது கருவை கலைத்தார்.

இது தொடர்பாக அப்போது அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு இதுதான் என கருதுகிறேன்.

GETTY NBC

இதுதான் எனக்கும் என் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் நல்லது.

உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இதுபோன்ற விடயங்களில் சிக்கி கொள்ள நான் விரும்பதில்லை என கூறினார்.

ஆனால் இவரின் முடிவுக்கு ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்தனர்.

அதாவது ஒரு குழந்தையின் உயிரை அழித்தது பெரும் தவறு, உங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது, உங்களுக்கு தோல்வியே கிடைக்கும் என விமர்சித்தனர்.

அதற்கேற்றார் போல நிதி நெருக்கடியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கி தவித்த ஜமீலா தனக்கு மார்பக புற்றுநோய் வந்துவிடுமோ என அஞ்ச மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவுக்கு அவர் குடிபெயர்ந்தார்.

ஆனால் பின்னர் அதிலிருந்து மீண்ட அவருக்கு நடிப்பில் பல வாய்ப்புகள் வர தொடங்கியது. இதை தொடர்ந்து பணமும் பெருமளவில் சம்பாதித்தார்.

இதையடுத்து தன்னை விமர்சித்து, கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பான அவரின் டுவிட்டர் பதிவில், நான் கருக்கலைப்பு செய்தது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் என்னை விமர்சித்த மெசேஜ்கள் வந்தது, மேலும் நான் மோசமானவள் மற்றும் பரிதாப நிலையில் தான் இருப்பேன் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன், வெற்றிகரமான கோடீஸ்வரியாக மாறியுள்ளேன், என் பணியும் சிறப்பாக போய் கொண்டிருக்கிறது, எல்லாரோருக்கும் நன்றிகள் என பதிலடி கொடுத்துள்ளார்.

ஜமீலா ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் 20 வயதிலிருந்து நன்றாக பணம் சம்பாதித்தார், ஆனால் வயது முதிர்ச்சி இல்லாததாலும், தவறான நபர்களின் நட்பாலும் அனைத்தையும் இழந்தார், ஆனால் பின்னர் தொழிலில் கவனம் செலுத்தி புகழடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்