லண்டனில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இறந்து கிடந்த இளைஞர்கள் யார்? புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞன் ஓமன் நாட்டை சேர்ந்தவர் எனவும், அவரிடம் இருந்த விலையுயர்ந்த வாட்சை திருடுவதற்கு மர்ம கும்பல் முயற்சித்த போது, இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் கடந்த வெள்ளிக் கிழமை அடுத்தடுத்து மூன்று கத்தி குத்து சம்பவங்கள் நடந்தன. இதில் மூன்று இளைஞர்கள் இறந்ததாகவும், ஆனால் அவர்கள் யார் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலும் இருந்தது.

(Picture: LNP)

இதையடுத்து தற்போது பிரபல ஆங்கில ஊடகம், Knightsbridge-ல் இறந்து கிடந்த நபரின் பெயர் Mohammed bin Abdullah Al Araimi எனவும் 26 வயது மதிக்கத்தக்க தக்க நபர் அன்றைய தினம் உள்ளூர் நேரப்படி காலை 1 மணியளவில் வீட்டிற்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, முக முடி அணிந்து வந்த கும்பல், அவர் கையில் அணிந்திருந்த விலை மதிப்புமிக்க ரோலக்ஸ் கடிகாரத்தை திருட முயற்சி செய்துள்ளனர்.

அப்போது நடந்த சண்டையின் போதே அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த நபர் அவரை காப்பாற்ற முயற்சித்தும் பரிதாபமாக இறந்துள்ளார்.

இது குறித்து உடன் இருந்த நண்பர் கூறுகைஇல், மொகமதுவிடம் இருந்த விலையுயர்ந்த கடிகாரத்தை திருடுவதற்காக அவர்கள் முயற்சித்தனர். ஆனால் அதை மொகமது தெரிந்து கொண்டதால், உடனே சண்டையில் ஈடுபட்டார்.

Mohammed bin Abdullah Al Araimi / (Picture: PA)

அப்போது அதில் இருந்த ஒருவன் கத்தியால் குத்திவிட்டு, ஒட நாங்கள் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், ஆனால் அவன் இறந்துவிட்டான்.

உண்மையிலே இது அதிர்ச்சியாக இருக்கிறது. உலகின் பிரபலமான அதுவும் லண்டனின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்டோருக்கு அருகே இப்படி ஒரு சம்பவம் என்ற போது வேதனையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் Mohammed bin Abdullah Al Araimi கடந்த மூன்று ஆண்டுகளாக பிரித்தானியாவின் Knightsbridge-ல் இருக்கும் Princes Gate Apartments-ல் தங்கி வந்துள்ளார்.

Mr Davis(Picture: UKNIP)

அதே போன்று அதே நாள் அதிகாலை 3.30 மணிக்கு Deptford-ல் இறந்து கிடந்த நபரின் பெயர் Rapper Crosslom Davis எனவும் மூன்றாவதாக அதிகாலை 2 மணிக்கு Hackney-யில் இறந்து கிடந்த நபரின் பெயர் Exauce Ngimbi எனவும் இவருக்கு வயது 22 என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் இவர் என்ன காரணத்திற்காக குத்தி கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் 14 வயது 23 வயது மற்றும் 26 வயது மதிக்கத்தக்க 2 பேர் என மொத்தம் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்