பிரித்தானியா: 500 மில்லியன் பயணங்கள் மேற்கொண்ட ரயில் சேவை நிறைவு - ஊழியர்களின் நெகிழ்ச்சியான செயல்!

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியாவில், 500மில்லியன் பயணங்கள் மேற்கொண்ட வெர்ஜின் ரயில் சேவை சனிகிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.

1997ஆம் ஆண்டில் இருந்து 22ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயில் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமையுடன் இச்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெர்ஜின் ரயில்கள் அவந்தி மேற்கு பகுதியில் இருந்து புதிய மாறங்களுடன் புதிய ரயில் பயணம் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேர் ரிச்சார்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் மற்றும் ஸ்ரேஜ்கோச் (Sir Richard Branson’s Virgin Group and Stagecoach) ஆகியோருக்குச் சொந்தமான குறித்த வெர்ஜின் ரயில்கள் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளன.

இதன் இறுதிச் சேவை லண்டன் யூஸ்டனில் இருந்து நேற்று இரவு 21:42 GMT க்கு வொல்வர்ஹம்ரனுக்கு சென்றது.

Getty image

இதேவேளை, சேர் ரிச்சார்ட் தங்கள் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர்களுடைய அற்புதான நம்பமுடியாத சேவைக்கு பாராட்டியுள்ளார்.

ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், அதில் பயன்படுத்திய போர்வைகள், குளிர் தாங்கும் உடைகள் ஆகியவை சாலையோரம் வசிக்கு வீடற்றோருக்கு ஊழியர்கள் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

LauraNormansell

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்