பிரித்தானியா வானிலை எச்சரிக்கை : 18மணி நேரத்தில் 40 அடி உயரத்தில் அலைகள்!

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடலில் உருவாகியுள்ள Atiyah என்ற புயலால் 70மைல் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Atiyah புயலால் வேல்ஸ், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள கடலில் 40 அடிக்கு உயரமான அலைகள் வீசும் என்றும், ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரை பகுதியில் 28அடிக்கு உயரமான அலைகள் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

50 முதல் 70 மைல் வேகத்தில் காற்று வீசும் என்பதால், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்கள் தளர்வாக இருந்தால் அவற்றை அகற்றும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று மற்றும் நாளை குறிப்பிட்ட பகுதிகளில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் கவனமுடன் செல்லவும், பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்