பிரித்தானியாவில் 11 பெண்கள் உள்ளிட்ட சிறார்களை சீரழித்து தலைமறைவாக இருந்த பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தான நபரை குற்றவாளி என நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
ஜோசப் மெக்கான் என்ற அந்த 34 வயது நபர் மீது பதியப்பட்ட 37 வழக்குகளும் நிரூபணமான நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தான நபர் என விளம்பரப்படுத்தப்பட்ட ஜோசப் மெக்கான் என்பவர் கைதான பின்னணி வெளியாகியுள்ளது.
பொலிசாரை ஏமாற்றி தலைமறைவாக இருந்த ஜோசப் மெக்கான், 14 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகளை கடத்த முயன்ற நிலையிலேயே பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
மெக்கானுக்கு நண்பர்கள் மத்தியில் இருந்து உதவி கிடைத்து வந்துள்ளது என உறுதி செய்த பொலிசார், அதனாலையே அவரால் பொலிசாரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 3.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடத்திய மெக்கான், அவரை காருக்குள் வைத்து சீரழித்துள்ளார்.
தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் திகதி மீண்டும் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடத்திய மெக்கான், அவரையும் சீரழித்துள்ளார்.
தொடர்ந்து அதே நாளில் 20 வயது மதிக்கத்தக்க இன்னொரு பெண்ணை கடத்திய மெக்கான், அவரையும் காருக்குள் வைத்து சீரழித்துள்ளார்.

மே மாதம் 5 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் பெண் ஒருவரையும் ஒரு சிறுமியையும் சிறுவன் ஒருவனையும் கடத்திய மெக்கான், மூவரையும் துஸ்பிரயோகம் செய்துவிட்டு மாயமாகியுள்ளார்.
அதே நாளில் 71 வயதான பெண்மணியை கடத்திய மெக்கான், அவரையும் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் 5 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் 13 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களையும் அதே வயது சிறுமி ஒருவரையும் கடத்திய மெக்கான், சிறுமியை மட்டும் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக தெரியவந்துள்ளது.
அதே நாளில் சுமார் 6.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க 2 பெண்களை காரில் கடத்தியதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மே 6 ஆம் திகதி மெக்கான் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
