பிரித்தானியா பொதுத்தேர்தல் 2019: கட்சிகள் மறந்த முக்கிய பிரச்னைகள்!

Report Print Abisha in பிரித்தானியா
137Shares

பிரித்தானிய பொதுத்தேர்தல், டிசம்பர் 12ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் மக்களின் முக்கிய பிரச்னைகளை கணக்கில் கொள்ளவில்லை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் இங்கிலாந்தின் பங்கு

Chris Morris (Reality Check Correspodent) கூறியுள்ளதாவது, பிரதமர் போரிஸ்ஜான்சனின் முக்கிய முழக்கமான Global Britain என்பது குறித்து தேர்தல் அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை. மேலும், பிரெக்சிட்க்குபின் அமெரிக்காவுடனான வர்த்தகம் குறித்தும் எந்த தகவலும் அறிக்கையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கான சேவைகள்

இங்கிலாந்தில், 78,000 குழந்தைகள் உள்ளுர் அமைப்புகள் மூலம் பராமரிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், இக்குழந்தைகள் பெருமளவில் ஆபத்தை சந்திப்பதாகவும். அதற்கான தீர்வுகள் குறித்து எந்த நடவடிக்கையில்லை, அவர்களுக்கான முறையான செலவீனங்கள் குறித்தும் எந்த கட்சியும் அறிக்கையில் வெளியிடவில்லை என்று விமர்சகர், Alison Holt(Social Affairs Correspondent) தெரிவித்துள்ளார்.

பல்கலைகழகங்கள்

பல்கலைகழகங்களின் முறையற்ற கட்டணம், மாணவர்களை பெருமளவில் பாதிப்பதாக உள்ளது என்று விமர்சகர் Sean Coughlan (education and family correspondent)தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 725, 000 அதிகரித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், கல்லூரிகளில் நெருக்கடிகளை உண்டுபண்ணலாம். எனவே புதிய பல்கலைகழகங்கள் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலவச பணம் இயந்திரம்

இலவச பணம் இயந்திரம் குறித்து இரண்டு ஆண்டுகளாக அதை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்த அரசியில் தலைவர்கள் தற்போதைய தேர்தலில் எந்த விவரத்தையும் குறிப்பிடவில்லை.

சமீப காலங்களில், பணத்தை எடுப்பது சிரமமாகவும், நாட்டின் ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் இயந்திரங்கள் வேகமாக மறைந்து வருவதாகவும், Colletta Smith (Consumer affirs correspondent) தெரிவித்துள்ளார்.

கடல்மட்ட உயர்வு

நாட்டின் எந்த பகுதியை சேமிக்க வேண்டும். எந்த பகுதியை கைவிட வேண்டும் என்று தொழிற் கட்சியின் அறிக்கையில் "managed realignment" என்ற வார்த்தை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய கடற்கரையை உருவாக்கும் குறியீடாக வெள்ள திட்டமிடும் அதிகாரிகளால் பார்க்கப்படுகின்றது.

பனிகட்டி உருகுதல் மூலம் கடல்மட்டம் உயர்வு குறித்து அலட்சியம் காட்டாமல் அதற்கான தீர்மானங்கள் கொண்டுவரும் காலம் இதுவாக இருக்க வேண்டும்.

மோசமான உண்மை என்னவென்றால், வெள்ள பாதுகாப்பிற்கான செலவீனங்கள் குறித்து உறுதிமொழி இருந்தபோதிலும் இங்கிலாந்து கடற்கரையை பாதுகாப்பது குறித்த எந்த தகவலும் எங்கும் இல்லை என்று David Shukman(science editor) தெரிவித்துள்ளார்.

வீட்டுமனையின் விலை

புதிதாக வாங்கும் வீடுகளின் விலை அதிகமாக உள்ளது. ஓய்வூதியதாரர்கள் அதிக வருமானமும் குறைந்த வருமான வரியும் செலுத்துகின்றனர். அதேபோல் இளைஞர்கள் குறைந்த வருமானமும் அதிக வருமான வரியும் செலுத்தும் சூழல் நிலவுவதாகவும், இதுகுறித்து அரசியல் கட்சிகள் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் Andy verity (economics correspondent) தெரிவித்துள்ளார்.

அவசரகால தொடர்பு

அதிக செலவுடன் தொடங்கப்பட்ட திட்டமாக அவசரகால தொடர்பு திட்டம் உள்ளது. ஆனால், இந்த தேர்தலில் அதை மேம்படுத்தும் எந்த திட்டமும் அறிவிக்கபடவில்லை. இது மக்களுக்கு தேவையான ஒன்று என்று Danny shaw (Home affairs correspondent) தெரிவித்துள்ளார்.

சேமிப்பு பழக்கம்

சேமிக்கும் பழக்கத்தை இங்கிலாந்து இழந்துள்ளது. உத்தியோகபூர்வ சேமிப்பு விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. வங்கிகளில், சேமிப்புகளுக்கான ஊக்க தொகை குறைந்துள்ளதே இதற்கான முக்கிய காரணம். இதனால், முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் சிரமத்திற்குள்ளாவதாகவும். இதற்கான தீர்வு குறித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை என்றும் விமர்சகர் Kevin Peachey (personal finance and consumer affairs)

பிச்சை எடுப்பவர்கள்

விமர்சகர் Sean Coughlan (Education and family correspondent) கூறுகையில், பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கான தீர்வுகளோ அவர்களின் வாழ்வாதாரம் குறித்தோ என்ற கட்சியும் பொது வெளியிலும், அறிக்கையிலும் குறிப்பிடாதது வருந்ததக்கது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்