பிரித்தானியாவிற்குள் மீண்டும் வியட்நாமியர்களை கடத்திய மூவருக்கு சிறை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
98Shares

பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்குள் வியட்நாமியர்கள் நால்வரைக் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 39 பேர், குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் ஒன்றில் பிரித்தானியாவுக்கு கடத்திக்கொண்டு வரப்படும்போது பரிதாபமாக உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே.

அந்த வழக்கு முடிவடைவதற்குள், மீண்டும் சில வியட்நாமியர்களை பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிலர் கடத்த முயல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இரண்டு கடத்தல்காரர்கள் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரான்ஸ் செல்வதை ரகசிய பொலிசார் Track செய்தனர்.

கடத்தல்காரர்கள் இருவரும் பிரான்ஸ் கரைக்கு சென்று 14, 15, 16 மற்றும் 23 வயதுடைய வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நான்கு பேரை கடத்திக்கொண்டு வரும்போது, Folkestone துறைமுகத்துக்கருகில் அவர்களை பொலிசார் கைது செய்தனர்.

மூன்று இளைஞர்களும் அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த 23 வயது நபர், தனது விருப்பத்துக்கு மாறாக தான் பிரான்சுக்கு கடத்தப்பட்டதாகவும், பல மாதங்களுக்கு அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் படகில் ஏற்றப்பட்டு பிரித்தானியாவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் தொடர்பாக Christian King (38) மற்றும் Henry Dunn (38) ஆகியோருக்கு ஆளுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

James Davis (31) என்பவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அந்த வியட்நாம் நாட்டவர்களைக் கடத்த பயன்படுத்திய படகில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமலிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்