ஒரு பெண் மீது ஆசைப்பட்ட இரு ஆண்கள்: தன்னை அடைவதற்கு பெண் கொடுத்த பயங்கர ஆலோசனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒரு பெண் மீது இரு ஆண்கள் ஆசைப்பட்ட நிலையில், சண்டையில் யார் ஜெயிக்கிறீர்களோ அவர்களுடன் வாழ்கிறேன் என்று ஒரு பெண் கூறியதையடித்து, அவருக்காக ஆண்கள் இருவர் கொலை வரை சென்ற சம்பவம் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த கென்டைச் சேர்ந்த ஆஸ்தா (35) என்னும் பெண், ஜுஸ்காஸ்காஸ் (42) என்பவரை திருமணம் செய்திருந்தார்.

அதே நேரத்தில் கென்டைச் சேர்ந்த மண்டாஸ் (25) என்பவருடனும் அவருக்கு தொடர்பு இருந்தது.

இரண்டு ஆண்களும் ஆஸ்தா தனக்குத்தான் என்று கூறிவந்த நிலையில், இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு முடிவு செய்தார் ஆஸ்தா. அதாவது இரண்டு ஆண்களும் சண்டையிட்டு யார் மற்றவரைக் கொல்வார்களோ அவரை திருமணம் செய்வது என முடிவு செய்துள்ளார் அந்த பெண்.

அதன்படி நடந்த சண்டையில், மண்டாஸ் ஜுஸ்காஸ்காசைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

கழுத்து, நெஞ்சு மற்றும் தோள்பட்டையில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஜுஸ்காஸ்காஸ் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மண்டாசும் ஆஸ்தாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டாஸ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஆனால் தான் சதித்திட்டம் தீட்டியதை ஆஸ்தா ஒப்புக்கொள்ளவில்லை. என்றாலும், மூவருக்கிடையிலான தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்