பிரித்தானிய ராணியாருக்கு மிகவும் பிடித்த கிறிஸ்துமஸ் உணவு என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
405Shares

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் விரும்பி உண்ணும் உணவு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எல்லோரையும் போலவே மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர், ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பின்பற்றும் குறிப்பிட்ட மரபுகளுடன்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் காலங்களில் ராணியார் விரும்பி உண்ணும் உணவு குறித்து அவரது ஆஸ்தான சமையற் கலைஞர் ஒருவர் அரண்மனை ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காலத்தில் ராணியார் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் காலகட்டத்தில் தமது கைப்பட தமக்கு மிகவும் பிடித்தமான mince pies உணவை சமைப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சமீப ஆண்டுகளாக அவரது நேரடி மேற்பார்வையில் ஆஸ்தான சமையற்கலைஞர்கள் குறித்த mince pies உணவை தயார் செய்கின்றனர்.

(Image: ROYALUK)

பிரித்தானியாவில் mince pies மிகவும் பிரபலம் என்றாலும், ராணியாரின் ரகசிய செய்முறையானது இதற்கு சுவை கூட்டுவதாக கூறப்படுகிறது.

இது கடந்த பல ஆண்டுகளாக ராணியாரால் பின்பற்றப்பட்டும் வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக mince pies தயாரிக்க எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைவிட அரண்மனையில் இதற்கான தயாரிப்பு வேலைகள் மாதங்கள் முன்னரே துவங்கப்படும் என தெரியவந்துள்ளது.

(Image: ROYALUK)

மட்டுமின்றி, mince pies தயாரிப்புக்கான அனைத்து பணிகளும் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள சிறு குழு ஒன்றால் கைகளாலையே மேற்கொள்ளப்பட்டு, ராணியாரின் உணவு மேஜையில் பரிமாறப்படுகிறது.

மேலும் இந்த உணவுக்கான மாமிசத்தை சில மாதங்களுக்கு முன்னரே தாயார் செய்து அதை உரிய பகுதியில் பாதுகாக்கின்றனர்.

தற்போது 93 வயதாகும் ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது 95-வது வயதில் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

பொறுப்புகள் அனைத்தையும் தமது மகனான இளவரசர் சார்லசிடம் ஒப்படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்