அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்க தவறிய இளவரசி: மகாராணியார் செய்த செயல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
220Shares

பக்கிங்காம் அரண்மனைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வந்துள்ள நிலையில், பிரித்தானிய மகாராணியார் அவரை வரவேற்க, தவறிய தனது மகளை மகாராணி செல்லமாக கடிந்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக பிரித்தானியா வந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை மகாராணியார், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் பக்கிங்காம் அரண்மனைக்கு வரவேற்றனர்.

ஆனால் மகாராணியாரின் ஒரே செல்ல மகளான இளவரசி ஆனி, அதில் பங்கேற்காமல் சற்று தள்ளி நின்றிருந்தார்.

அதை கவனித்த மகாராணியார் நீ ஏன் ட்ரம்பை வரவேற்க வரவில்லை என கடிந்துகொள்ளும் காட்சியை அந்த வீடியோவில் காணலாம்.

பதிலுக்கு இளவரசி ஆனியும் அதற்கென்ன, என்பது போல் தோளைக் குலுக்கிக் கொள்ள அருகிலிருந்த அனைவரும் சிரிக்கிறார்கள்.

இது போதாதென்று, வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் மறைமுகமாக ட்ரம்பை கிண்டல் செய்ய, அதையும் இளவரசி ஆனி அருகில் நின்று ரசிக்கும் காட்சியும் இணையத்தில் பரவிவருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்