லண்டனில் துப்பாக்கிச் சூடு... தெருவில் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த இளைஞர்

Report Print Basu in பிரித்தானியா
198Shares

பிரித்தானியா தலைநகர் லண்டனில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் வெஸ்ட் கில்பர்ன் பகுதியிலே இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. உள்ளுர் நேரப்படி 20:29 மணிக்கு தகவல் கிடைத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலின் படி, வால்டர்டன் சாலையில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல் கிடைத்தது.

சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற சோதனை செய்த போது, தெருவில் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை கண்டறிந்தோம்.

பின்னர், ஆம்புலன்ஸ் உதவியுடன் பாதிக்கப்பட்ட இளைஞனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுடப்பட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, குற்றம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பிரிட்ஜ் தீவிரவாத தாக்குதல் நடந்த சில தினங்களில் வெஸ்ட் கில்பர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது லண்டன் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரித்தானியா தலைநகர் லண்டனில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றம் சம்பவங்களால் விரக்தியடைந்த பலர் சமூக ஊடகங்களில் பாதுகாப்பு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்