லண்டனில் இருந்து ரகசியமாக போலந்திற்கு பறந்த 4 பில்லியன் மதிப்புள்ள தங்கக்கட்டிகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
665Shares

விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர் தொழில்நுட்ப லாரிகள் மற்றும் சிறப்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையில், போலந்து 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து வார்சாவுக்கு திருப்பி எடுத்து சென்றுள்ளது.

இந்த ஆண்டு பல மாதங்களில், வெளியிடப்படாத லண்டன் விமான நிலையத்தில் இருந்து இவை கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. மொத்தம் எட்டு இரவு நேர விமானங்கள் மூலம் 100 டன் எடையுள்ள 8,000 தங்கக் கட்டிகள் போலந்தின் பல இடங்களுக்கும் சென்றடைந்திருக்கின்றன.

இரண்டாம் உலகப் போர் வெடித்த நேரத்தில் போலந்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், தங்கக்கட்டிகள் நாஜிக்களிடம் சிக்கிக்கொள்ளும் என போலந்து அரசாங்கம் அஞ்சியது.

அதனால் அவை அனைத்தும் பல தசாப்தங்களாக இங்கிலாந்து வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் போலந்தின் தேசியவாத அரசாங்கம் இப்போது 'நாட்டை வலுப்படுத்தும்' பொருட்டு தங்கத்தை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பு நிறுவனமான ஜி 4 எஸ் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் தங்கத்தை கொண்டு செல்லும் பணியை செய்தது. இதுவே உலகின் வங்கிகளுக்கு இடையில் நடைபெற்ற மிகப்பெரிய தங்கப் பரிமாற்றம் என கூறப்படுகிறது.

இது எல்லாம் மிகவும் ரகசியமானது, மிக முக்கியமானது அது சிறப்பாக செய்யப்பட்டது என G4Si இன் பொது மேலாளர் பால் ஹோல்ட் கூறியுள்ளார்.

கடந்த வாரம் திங்களன்று, போலந்தின் வங்கித் தலைவர் ஆடம் கிளாபிஸ்கி தங்கப் பரிமாற்றம் முடிந்ததாக அறிவித்தார். 100 டன் போலந்து தங்கம் இப்போது வார்சாவில் உள்ள என்.பி.பி கருவூலத்தின் பெட்டகங்களில் பாதுகாப்பாக பூட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்