வேண்டும் வரத்தை தரும் இங்கிலாந்து விநாயகர்!... சிறப்புகள் தெரியுமா?

Report Print Fathima Fathima in பிரித்தானியா

இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக்கடவுள் விநாயகர், இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்,யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

விநாயகரைவணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன்செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

கோவில் என்று பெயர் வைத்து கூரையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்பவேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனைஎன வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி விநாயகர் தான்.

இவருக்குஇந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் கோவில்கள் இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடும் இடமாக இங்கிலாந்தின் கொவன்றியில் பசுமையான, ஜில்லென்ற ஆற்றங்கரையில்வீற்றிருக்கிறார் விநாயகர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்