கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் வில் அம்பை பாய்ச்சி கொலை செய்த இந்தியருக்கு 33 ஆண்டுகள் சிறை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் வில் அம்பை பாய்ச்சி கொலை செய்த இந்திய வம்சாவளி கணவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த 51 வயதான Ramanodge Unmathallegadoo என்பவர், தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்தார்.

எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த 35 வயதான Devi Muhammad வீட்டில் தனது கணவருடன் இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த Ramanodge, மிருகத்தனமான முறையில் வில் அம்பை வயிற்றில் எய்திள்ளார்.

18 அங்குலம் கொண்ட அந்த அம்பு குடல், வயிறு, கல்லீரல் மற்றும் இதயம் ஆகியவற்றின் வழியே பாய்ந்ததால் Devi Muhammad சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக உள்ளிருந்த குழந்தை மட்டும் உயிர்பிழைத்தது.

இந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, Ramanodge-க்கு பரோலுக்கு முன் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்