பிரித்தானியாவில் புதர்கள் மண்டிக்கிடந்த இடத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 13 வயது சிறுமி! வழக்கின் நிலை என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் புதர்கள் மண்டிக்கிடந்த பகுதியில் தூக்கில் சடலமாக தொங்கிய 13 வயது சிறுமி வழக்கில் போதுமான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Nottinghamshire-ஐ சேர்ந்த ஆம்பெர் பீட் (13) என்ற சிறுமி பள்ளியில் படித்து வந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் வீட்டிலிருந்து மாயமானார்.

இந்நிலையில் காணாமல் போன மூன்று நாட்களுக்கு பின்னர் வீட்டின் அருகில் உள்ள புதர்கள் நிறைந்த பகுதியில் ஆம்பெர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்களை திரட்ட பொலிசார் முயன்ற நிலையில் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் சிறு சிறு ஆதாரங்களை நாங்கள் சேர்த்து வைத்திருந்தும் இந்த வழக்குக்கு தேவையான போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இதனால் இவ்வழக்கு தொடர்பாக யாரிடமும் விசாரிக்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என பொலிசார் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பெர் சடலமாக கிடந்த பகுதியில் சின்ன ஆதாரங்களை பொலிசார் திரட்டியும் அதற்கு மேல் இவ்வழக்கில் முக்கிய விடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதையே பொலிசார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சிறுமி ஆம்பெர் குடும்பத்தாரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்