உலகில் சோம்பேறி இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு: பிரித்தானியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

உலக நாடுகளில் அதிக உடல் உழைப்பில் ஈடுபடாத, சோம்பேறி இளைஞர்கள் வாழும் நாடாக தென் கொரியா தெரிவாகியுள்ளது.

ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்கும் பொருட்டு 11 முதல் 17 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 5-ல் ஒருவர் மட்டுமே அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக புதிய ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பாக தென் கொரியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் சூடான் உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் 90 சதவிகிதம் பேரும் சோம்பேறிகள் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை பொறுத்தமட்டில் 79.9 சதவிகித இளைஞர்களும் போதுமான உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என அந்த ஆய்வில் தெரியவருகிறது. உலக அளவில் இது 29-வது இடமாகும்.

ஆனால் அமெரிக்கா இளைஞர்கள் 72 சதவிகிதம் பேரே உடல் உழைப்பில் நாட்டமில்லாதவர்கள் என கூறப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் கவலையளிக்கும் வகையில் உள்ளது எனவும், உடற்பயிற்சியை ஊக்குவிப்பது மிக முக்கியம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது உடல் பருமன் உள்ளிட்ட மிக ஆபத்தான நிலையில் இருந்து குழந்தைகளை காக்க உதவும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உடல் உழைப்பில் அதிக ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் வாழும் நாடு என வங்கதேசத்தை தெரிவு செய்துள்ளனர்.

இந்த வரிசையில் அடுத்த நான்கு இடங்களில் ஸ்லோவாக்கியா, அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் பல்கேரியா உள்ளன.

இதே போன்று உடல் உழைப்பில் நாட்டமில்லாத இளைஞர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில், தென் கொரியாவுக்கு அடுத்து பிலிப்பைன்ஸ், கம்போடியா, சூடான் மற்றும் திமோர்-லெஸ்டே நாடுகள் உள்ளன.

பிரித்தானியாவை பொறுத்தமட்டில் மூன்று சிறார்களில் ஒருவர் அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் NHS வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-ல் இருந்து 11 வயது கொண்ட பிரித்தானிய சிறார்களில் சுமார் 24.6 சதவிகிதம் பேர் உடல் எடை அதிகம் கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்