பிரித்தானிய தேர்தல் 2019: வெளிநாட்டவரை குறிவைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இன்னமும் தேர்தல் நடைபெறக்கூட இல்லை, அதற்குள் கன்சர்வேட்டிவ் கட்சியினர் பிரித்தானியரல்லாதோரைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டனர்.

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என அமெரிக்கர்கள் கூறத்தொடங்கிவிட்டதுபோல், இங்கிலாந்தில் பிரித்தானியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக, சொத்து வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு 3% அதிக stamp duty விதிக்கும் திட்டத்தை கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ளது.

லேபர் கட்சியினரும் இதேபோல் வீடு வாங்கும் வெளிநாட்டவர்கள் மீது சுங்கம் வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்து உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில், வெளிநாட்டவரும் பிரித்தானியர்களைபோலவே எளிதாக பிரித்தானியாவில் வீடு வாங்கலாம் என்பதை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் சொத்துக்களில் முதலீடு செய்வதாக ஒரு எண்ணம் ஏற்கனவே பிரித்தானியர்களிடையே காணப்படுகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி, 2014க்கும் 2016க்கு இடையில் லண்டனிலுள்ள 13% வீடுகள் வெளிநாட்டவர்களால் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

எனவே வழக்கமான stamp duty கட்டணங்கள் போக, வெளிநாட்டவரிடம் கூடுதலாக 3% உபரி கட்டணங்கள் வசூலிக்கும் திட்டத்தை கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்