பிரித்தானியாவில் சடலமாக கிடந்த 39 பேரின் சாம்பலாவது நாடு திரும்பும்..! கலங்கும் குடும்பங்களுக்கு வியட்நாம் அளித்த உறுதி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் எசெக்ஸ் லொறி சம்பவத்தில் பலியான 39 பேரின் உடல் எச்சங்களை விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய வியட்நாம் அரசு அதிரடி முடிவு செய்துள்ளது.

பிரித்தானியாவில் லொறியில் இறந்து கிடந்த 39 உள்ளூர் மக்களின் எச்சங்களை திரும்பக் கொண்டுவருவதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வியட்நாமிய அரசு நடவடிக்கை முன்னெடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சாம்பலாகவோ அல்லது சவப்பெட்டிகளிலோ கொண்டுவருவதை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே பணம் செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என உயர்மட்ட சட்டமன்றக் கூட்டத்தில் வியட்நாமிய வெளியுறவு துணை அமைச்சர் புய் தன் சன் கூறியதாக மேற்கோள் காட்டி வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பின்னர் அரசாங்கத்திற்கு அக்கட்டணத்தை திருப்பிச் செலுத்துவார்கள், தகனம் செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் விமான ஏற்பாடு போன்ற விஷயங்களில் வியட்நாம், பிரித்தானியா தரப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் துணை அமைச்சர் புய் தய் சன் தெரிவித்துள்ளார்

மேலும், இச்செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பும் வணிகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் நேரடியாக செலுத்தலாம் என்றும் கூறினார்.

ஹனோய் நகரில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சாம்பலைக் கொண்டுவருவதற்கான கட்டணம் 1,370 பிரித்தானியா பவுண்டுகள், அதே சமயம் சவப்பெட்டியில் உடல் திருப்பி அனுப்பப்படுவதற்கு 2,208 பிரித்தானியா பவுண்டுகள் செலவாகும் என்று வியட்நாம் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அக்டோபரில் பிரித்தானியா மாவட்டமான எசெக்ஸில் லொறியில் இறந்து கிடந்த 39 பேரும் வியட்நாமிய நாட்டினர் என்பது உறுதி செய்யப்பட்டது.

வியட்நாமிய பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் படி, வடக்கு ஹை ஃபோங் நகரம், வடக்கு ஹாய் டுவோங் மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களான நங்கே ஆன், ஹா டின், குவாங் பின் மற்றும் துவா தியென் ஹியூ ஆகிய இடங்களில் அவர்கள் நிரந்தர வசிப்பிடத்தை வைத்திருந்தனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்