பிரித்தானிய இளவரசர் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம்: எச்சரிக்கும் வழக்கறிஞர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

விசாரணைக்காக பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ அமெரிக்கா சென்றால் கைது செய்யப்படலாம் என ஸ்காட்லாந்து வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க கோடீஸ்வரரும், பாலியல் வழக்கு குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் சேர்ந்து, பிரித்தானிய இளவரசர் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக வர்ஜீனியா ராபர்ட்ஸ் என்கிற இளம்பெண் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

அவரை தொடர்ந்து அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்கள் இளவரசர் மீது வந்து குவிந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இளவரசர் மறுப்பு தெரிவித்திருந்தாலும் கூட, அவர் சம்மந்தப்பட்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.

இதனால் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இளவரசர், பொதுக் கடமைகளில் இருந்து விலகுவதாகவும், தேவைப்பட்டால், எந்தவொரு தகுந்த சட்ட அமலாக்க துறைக்கும் அவர்களின் விசாரணைகளுக்கு உதவுவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு முக்கிய மனித மற்றும் சிவில் உரிமை வழக்கறிஞரான பரோனஸ் ஹெலினா கென்னடி, விசாரணைக்காக இளவரசர் ஆண்ட்ரூ அமெரிக்கா சென்றால் அங்கிருந்து வெளியேற முடியாமல் கைது செய்யப்படலாம் என எச்சரித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்