பிரித்தானியாவின் இன்று பொதுத்தேர்தல்: வாக்களிப்பது எப்படி? முடிவுகள் எப்போது வெளியாகும்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதற்கு சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.

பொதுத்தேர்தல் எப்போது?

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.

எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை வாக்களிக்கலாம்?

தேர்தல் வாக்கெடுப்பு அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குச்சாவடிகள் திறந்திருக்கும்.

பொதுத்தேர்தலில் வாக்களிக்க என்ன செய்ய வேண்டும்?

முதலாவது நீங்கள் வாக்களிப்பதற்காக GOV.UK இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

பதிவு செய்வதற்கான கடைசி நாள், நவம்பர் மாதம் 26ஆம் திகதி (நள்ளிரவு வரை). தபாலில் உங்கள் வாக்கைச் செலுத்த நவம்பர் 26 அன்று மாலை 5 மணியளவில் விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் விண்ணப்பம் தேர்தல் அலுவலகத்தை டிசம்பர் 12 இரவு 10 மணிக்கு சென்றடைந்திருக்கவேண்டும்.

உங்களால் வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாமல், உங்களுக்கு பதிலாக வேறொருவரை வாக்களிக்க அனுப்பும் எண்ணம் இருந்தால், அதற்காக டிசம்பர் மாதம் 4ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த தேர்தல் பிரெக்சிட் மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்?

பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், கன்சர்வேட்டிவ் கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவை பெறமுடியும் என்பதில் போரிஸ் ஜான்சன் உறுதியாக இருக்கிறார்.

அப்படி பெரும்பான்மை ஆதரவை பெற்றுவிட்டால், பிரெக்சிட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகள் என்ன கூறுகின்றன?

சமீபத்திய கருத்துக்கணிப்புகள், கன்சர்வேட்டிவ் கட்சி படிப்படியாக வலுப்பெற்று வருவதையும், லேபர் கட்சி சற்று தொலைவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் அதைத்தொடர்ந்து லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி இருப்பதயும் காட்டுகின்றன.

தேர்தல் முடிவுகளை நாம் எப்போது அறிந்துகொள்ளமுடியும்?

வாக்கெடுப்பு 10 மணிக்கு முடிவடையும் நிலையில், இரண்டு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்படும். இது சுமார் 2 மணியளவில் முடிவடையும். அதைத் தொடர்ந்து மறுநாள் அதிகாலையில் வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்