பிரித்தானியா சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்! என்ன எழுதியிருந்தார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் உணவு கேட்டு கடிதம் எழுதியிருப்பது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் மாதம் 25-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இன்னும் அதற்கு குறைவாகவே நாட்கள் உள்ளதால், இப்போதே கிறிஸ்துமஸ் களை கட்ட துவங்கிவிட்டது.

அதன் படி பிரித்தானியாவின் Liverpool-ஐ சேர்ந்த சிறுமி ஒருவர் அங்கிருக்கும் L6 Community Centre-க்கு சென்றுள்ளார், அங்கு கிறிஸ்துமஸ் தினத்திற்காக கிறிஸ்துமஸ் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

அதில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறலாம் மற்றும் சாண்டா தாத்தாவிடம் என்ன கேட்க நினைக்கிறீர்களோ கேட்கலாம். கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா தாத்தா என்பதால், அது குழந்தைகளை கவரும் வகையில் வைக்கப்பட்டிருந்தது.

(Image: Gerard Woodhouse)

அதில், அந்த சிறுமி அன்புள்ள சாண்டா உங்களால் உதவ முடியுமா? கிறிஸ்துமஸிற்கு எங்களுக்கு வீடு கிடைக்குமா? அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று என் தாய் விரும்புகிறாள், அதுமட்டுமின்றி சாப்பிடுவதற்கு சாப்பாடு கொடுக்க முடியுமா? கிறிஸ்துமஸிற்கு எனக்கு அழகான பொம்பை போதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் சிறுமி அப்படி கூறியிருப்பனும், அவர் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறார், அவரின் குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிய வைத்திருக்கிறார், இதைக் கண்டவுடன் வேதனையடைந்தேன்.

நான் அந்த L6 Community Centre-ல் இருக்கும் பெட்டியை திறந்து அதில் இருந்த கடிதத்தை படித்து பார்த்த போது இருந்த வார்த்தைகள் தான் இது என்று அப்பகுதியின் தொழிலாளர் கட்சியின் உள்ளூர் தலைவர் Gerard Woodhouse தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறித்த சிறுமியை பற்றிய விவரங்களை தேடி வருவதாகவும், அதன் பின் அவர் மற்றும் குடும்பத்தினரை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹோட்டல் ஒன்றில் கொண்டாட முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளங்களில் வைரலாக, இணையவாசிகள் பலரும் அந்த சிறுமி யார் என்று கூறுங்கள் நாங்களும் உதவுகிறோம் என்று தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...