கர்ப்பத்தை கலைத்திருப்பேன்: சொந்த தந்தையால் NHS மீது வழக்குத் தொடுத்த பிரித்தானிய தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தாயார் ஒருவர் தமது தந்தைக்கிருக்கும் நோய் தொடர்பில் பிள்ளைகளான தங்களுக்கு தெரியப்படுத்த மறுத்ததாக கூறி தேசிய சுகாதார சேவை அமைப்பான NHS மீது இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.

குறித்த பரம்பரை வியாதி தொடர்பில் தமக்கு NHS நிர்வாகம் தெரியப்படுத்தி இருந்தால், தமது கர்ப்பத்தை கலைத்திருப்பேன் எனவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சட்ட காரணங்களுக்காக பெயர் குறிப்பிடாத 40 வயதுடைய அந்த பெண்மணியின் தந்தை Huntington எனப்படும் வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இது மூளையின் செல்களை பாதிப்புக்கு உள்ளாக்கி, கொலை உள்ளிட்ட கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு தூண்டும்.

இந்த வியாதி காரணமாக குறித்த பிரித்தானிய தந்தை தமது மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பின்னர் நடந்த பரிசோதனையில் அந்த நபருக்கு Huntington வியாதி இருப்பது தெரியவந்தது.

இது பரம்பரை வியாதி என்பதால் குணப்படுத்துவது கடினம். பெற்றோருக்கு இந்த வியாதி இருந்தால், பிறக்கும் பிள்ளைக்கு 50 சதவிகிதம் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது NHS மீது இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ள பெண்மணியிடம் இந்த வியாதி தொடர்பில் தெரியப்படுத்துவது தொடர்பில் மருத்துவ ஊழியர்கள் அவரது தந்தையிடம் கோரியுள்ளனர்.

ஆனால் அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு பின்னர் தற்செயலாக இந்த விவகாரம் அவருக்கு தெரியவந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு Huntington வியாதி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே இவர் தமது பெற்றோருக்கு இந்த வியாதி இருந்ததா என விசாரித்துள்ளார்.

இதனையடுத்து சுமார் £350,000 இழப்பீடு கேட்டு அவர் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்