கழிப்பறைக்கு செல்லும் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறை! அதனால் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட கதி

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துவது தொடர்பாக போடப்பட்ட கடுமையான விதிமுறையால் 4 வயது மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Cardiff-ல் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் கழிப்பறைக்கு போகும் போது அங்கு பயன்படுத்தும் பேப்பரை குறைந்தளவு மற்றும் தேவையான அளவு மட்டுமே கொண்டு போக வேண்டும் என கடுமையான விதிமுறை சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது.

இதனால் அங்கு படிக்கும் 4 வயது மாணவி பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்.

இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான மாணவி மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சிறுமியின் தாய் பஹீம் கனும் கூறுகையில், என் மகள் வீட்டிலும் கழிப்பறைக்கு செல்வதை குறைத்து கொண்டாள், பின்னர் அவரிடம் விசாரித்த போதே பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விதிமுறை குறித்து தெரியவந்தது.

குழந்தைகளின் உடல்நலம் மீது அக்கறையில்லாமல் அந்த பள்ளிக்கூடம் செயல்பட்டுள்ளது.

இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான என் மகள் மலச்சிக்கல் பிரச்னையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக் புகார் அளித்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதனிடையில் கழிப்பறை பேப்பர் தொடர்பான விதிமுறையை தளர்த்தி கொள்வதாக பள்ளி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்