நாங்கள் மட்டும் வெற்றி பெற்றால்!.... பிரித்தானியாவில் இலவச பிராட்பேண்ட்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியா தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் இலவச பிராட்பேண்ட் வழங்கப்படும் என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தொழிலாளர் கட்சி இந்த வாக்குறுதியை அளித்துள்ளது.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்த பிராட்பேண்ட் சேவை, தற்போது அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டதால் இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை முழுமையாக செயல்படுத்த 20.3 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 5 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் BTயின் சில பகுதிகளை தேசியமயமாக்கவும், அமேசான், கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வரி விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள TechUK, தொலைத்தொடர்பு துறைக்கு பேரழிவு, டிஜிட்டல் பொருளாதாரத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்