போதையால் தலை வலிப்பதாக எண்ணி தூங்கச் சென்ற இளம்பெண்: காலையில் தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது தோழிகளுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், தலை வலிப்பதாகக் கூறி சீக்கிரமாக தூங்கச் சென்றார்.

Gatesheadஇலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய Jessica Cain (21), அம்மாவிடம் தலை வலிப்பதாகக் கூறிவிட்டு சீக்கிரமாக தூங்க சென்றிருக்கிறார்.

அதிகமாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு மதுபானம் அருந்தியதால், போதையின் தாக்கத்தால் தனக்கு தலைவலிப்பதாக எண்ணிக்கொண்டு தூங்கச் சென்றார் Jessica. மறுநாள் காலையில் வேலைக்குச் செல்லும் முன், மகளை எழுப்பச் சென்ற Jessicaவின் தாய் Sheila Rowell (49), மகள் பிணமாகக் கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

என்ன நடந்தது என்று தெரியாமல் ஒரு வேளை மாரடைப்பு ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி, திகைத்துப்போய் அமர்ந்துவிட்டார் அவர்.

Jessicaவின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. பின்னர், ஐந்து நாட்களுக்குப்பிறகு, உடற்கூறு ஆய்வில் Jessicaவுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

Derby பல்கலைக்கழக மாணவியான Jessica, படிக்கச் செல்வதற்கு முன்புதான் முறையாக தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டிருக்கிறார்.

தலைவலி என்று கூறி, தூங்கச் சென்ற மகள் கண் திறக்காமலே இறந்துபோக, திகைத்துப்போயிருக்கிறார் Sheila.

தலைவலி கூட பெரிய நோய் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம், எதையும் அலட்சியம் செய்யாதீர்கள் என்கிறார் Sheila.

அது, தனது அன்பு மகளைப் பறிகொடுத்து அவர் படித்த அனுபவப் பாடம் ஆயிற்றே!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்