இளம் கல்வியாளரை இந்தியாவுக்கு திரும்பிப் போகச் சொல்லும் பிரித்தானிய உள்துறை அலுவலகம்: காரணமும் எதிர்ப்பும்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
612Shares

இந்தியாவில் களப்பணிக்காக சென்றிருந்த இளம் கல்வியாளர் ஒருவரை இந்தியாவுக்கே திரும்பிப் போகச் சொல்லும் பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு கல்வியாளர்களும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Dr Asiya Islamஇன் Indefinite Leave to Remain (ILR) விண்ணப்பத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் நிராகரித்துள்ளது.

குறித்த காலத்திற்கு அதிகமாக அவர் பிரித்தானியாவுக்கு வெளியில் தங்கியதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தான் ஏன் அவ்வளவு காலம் பிரித்தானியாவுக்கு வெளியில், அதாவது இந்தியாவில் இருந்தேன் என்பதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதை சுட்டிக்காட்டும் 31 வயதான Asiya, தான் இந்திய நகரமயமாக்கல் தொடர்பான தனது முனைவர் பட்டத்திற்காக புது டில்லியில் இருப்பது அத்தியாவசியமான ஒன்று என்கிறார்.

சுமார் பத்தாண்டுகளாக பிரித்தானியாவில் வசித்துவரும் Asiya, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.Asiyaவுக்கு ஏற்பட்டுள்ள நிலை கண்டு கொதித்தெழுந்துள்ள கல்வியாளர்களும் மாணவர்களும் அவருக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராகவும், வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வலம் வரும் அந்த கடிதத்தில், இதுவரை சுமார் 900 கல்வியாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Asiya தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்