திருமண மோதிரத்தை தேடிய நபருக்கு கிடைத்த தங்க புதையல்..! சந்தோசத்தில் கண்கலங்கிய நண்பர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் காணாமல் போன நண்பரின் திருமண மோதிரத்தை தேடிய நபருக்கு பழங்கால தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பவுல், மைக்கேல் என்கிற இரண்டு நண்பர்கள் வடஅயர்லாந்தில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர் தன்னுடைய திருமண மோதிரத்தை வயல்வெளியில் தொலைத்துவிட்டதாகவும், அதனை கண்டுபிடிக்க உதவுமாறும் கூறியுள்ளார்.

உடனே இருவரும் சேர்ந்து மெட்டல் டிடெக்டர் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர். பால் ரெய்னார்ட் தேடிக்கொண்டிருந்த இடத்தில் முதலில் ஒரு 5 பென்ஸ் நாணயமும், ஒரு குதிரை லாடமும் கிடைத்துள்ளது.

அதனைதொடர்ந்து குவியலாக 84 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. 1500 களின் முற்பகுதியில் கிங் ஹென்றி VIII இன் ஆட்சிக்காலத்தை சேர்ந்தவை என பவுல் கூறியுள்ளார்.

இதுகுறித்து கூறிய பவுல், தங்க நாணயகங்களை கண்டதும் சந்தோசத்தில் கத்த ஆரம்பித்துவிட்டேன். எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. என்னால் அதனை நம்ப முடியவில்லை. நான் நடுங்க ஆரம்பிவிட்டேன். நாங்கள் கனவு கண்ட தருணம் இது என்று கூறியுள்ளார்.

தற்போது நாணயங்களை உல்ஸ்டர் அருங்காட்சியகம் மதிப்பிட்டு வருகிறது. மொத்த நாணயங்களும் சேர்த்து 100,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிலும் ஒரு நாணயம் மட்டும் 5,000 பவுண்டுகள் மதிப்புள்ள அரிய ஹென்றி VIII நாணயம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இறுதிவரை அந்த நண்பர்கள் மோதிரத்தை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்