பிரித்தானியாவுக்குள் தொடரும் மனித கடத்தல்: மேலும் ஒரு லொறியிலிருந்து 15 புலம்பெயர்வோர் மீட்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீபத்தில் 39 பேர் லொறி ஒன்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பிரித்தானியாவில் மீண்டும் சட்டவிரோத புலம்பெயர்வோருடன் ஒரு லொறி சிக்கியுள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில், லொறி ஒன்று சந்தேகத்திற்குரிய விதத்தில் செல்வதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார். Wiltshire இலுள்ள Chippenham என்ற இடத்திற்கருகில் பொலிசார் லொறியை மடக்கிப்பிடித்துள்ளனர்.

அந்த லொறியை சோதனையிட்டதில், அதற்குள் புலம்பெயர்வோர் என கருதப்படும் 15 பேர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லொறிக்குள்ளிருந்த அனைவரும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், யாரும் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட லொறியில் இருந்ததுபோல் அபாயகரமான நிலையில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த லொறியின் சாரதி, அந்த 15 பேரையும் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்ததாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்