கொல்லப்படுவதற்கு சற்று முன்பு.. இளைஞருடன் சுற்றிய பிரித்தானியா இளம்பெண்ணின் சிசிடிவி காட்சி வெளியானது

Report Print Basu in பிரித்தானியா

நியூசிலாந்தில் கொல்லப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்ட பிரித்தானியா இளம்பெண் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளிடம், அவர் நியூசிலாந்து இளைஞடன் சுற்றிய சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் எசெக்ஸை சேர்ந்த 22 வயதான கிரேஸ் மில்லேன், உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு பின் ஆக்லாந்தில் மர்மமாக கொல்லப்பட்டு கிடந்த மில்லேனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த பொலிசார், மில்லேன் டினட்ர் ஆப் மூலம் நியூலாந்தை சேர்ந்த 27 வயதுடைய நபருடன் பழகிவந்ததை கண்டறிந்தனர். மேலும், நடந்த விசாரணையின் அடிப்படையில் அவர் தான் மில்லேனை கொன்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தினர்.

வழக்கு விசாரணையில் இருவரும் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. தற்போது, மில்லேன் நியூசிலாந்து இளைஞனை சந்தித்து நகரில் அவருடன் நெருக்கமாக சுற்றிதிரிந்த சிசிடிவி காட்சிகள் நீதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில், மில்லேன் தான் தங்கியிருந்த Base Backpackers விடுதியில் இருந்து அருகில் இருந்து ஸ்கை சிட்டிக்கு சென்று அவரை சந்தித்ததும், பின்னர், இருவரும் பாரிக்கு சென்று ஒன்றாக மது அருந்தியதும் பதிவாகியுள்ளது.

மேலும், இருவரும் நெருக்கமாக தெருவில் நடந்துச் சென்றுள்ளனர், கடைசியாக மில்லேன் குற்றம்சாட்டப்பட்டவர் வசிக்கும் கட்டிடத்தின் லிப்ட்டில் காணப்பட்டுள்ளார். மில்லேன் அவரது 22வது பிறந்தநாள் அன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கிறஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது, மில்லேன் 2018 டிசம்பர் 1 அல்லது 2ம் திகதி இருவரும் நெருக்கமாக இருந்த போது எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பார் என கோரியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்