அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்... சவப்பெட்டியில் இருந்த வார்த்தை! நெகிழ்ச்சி தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் உயிரிழப்பதற்கு முன் தன்னுடைய இறுதிச்சடங்கு இப்படி நடக்க வேண்டும் என்று தாய் கூறியதால், அதன் படியே மகள் செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Leicester பகுதியை சேர்ந்தவர் Tina Watson. 73 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.

(Image: Family supplied)

இதையடுத்து அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு தேவையான வேலைகள் செய்யப்பட்டது. அப்போது அவரின் சவப்பெட்டியில் பிரபல டீ தூள் நிறுவனமான டை போவின் பெயர் எழுதப்பட்டு, பெட்டி முழுவதும் சிவப்பு பேப்பர்களால் மூடப்பட்டிருந்தது.

(Image: Alex Hannam/BPM MEDIA)

இதனால் இது குறித்து அவரின் மகள் Deb Donovan-விடம் பிரபல ஆங்கில ஊடகம் கேட்ட போது, அதற்கு அவர் என்னுடை அம்மா மிகப் பெரிய டீ பிரியர், நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 கப் டீ குடிப்பார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய சித்தப்பா பீட்டர் இறந்துவிட்டார். அப்போது அவரின் இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டியை பற்றி நாங்கள் விவாதித்து கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் நாங்கள் விளையாட்டு தானாமா அவர் டீ அதிகமாக குடிப்பதால், நீங்கள் இறந்துவிட்டால் உங்களுடன் சேர்ந்து இதையும் வைக்க வேண்டும் என்று கூறி சிரித்தோம்.

(Image: Alex Hannam/BPM MEDIA)

ஆனால் அதன் பின்பு தான் என் அம்மா அதைப் பற்றி தீவிரவமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். அவர் என்னிடம் டை போவின் பெயர் எழுதப்பட்ட சவப்பெட்டியில் என்னை வைக்க வேண்டும் என்று கூறினார். அதன் படியே நாங்கள் இப்போது செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் Tina Watson புற்றுநோய் காரணமாக தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இருப்பினும் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Image: Alex Hannam Photography)

இந்த சவப்பெட்டியை செய்த இயக்குனரிடம் இது குறித்து கேட்ட போது, இது எங்கள் அசாதாரண கோரிக்கைகளில் ஒன்றாகும், ஆனால் அதைச் செய்ய முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். வாடிக்கையாளர் விரும்புவதை வாடிக்கையாளர் பெறும்போது எப்போதும் நன்றாக இருக்கும் என்று கூறி முடித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்