இரண்டு மணி நேரத்தில் லண்டன் நகரை அலற வைத்த 5 சம்பவங்கள்: பீதியில் உறைந்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இரண்டு மணி நேரத்தில் அரங்கேறிய 5 கத்திக் குத்து சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இரவு நேரத்தில் நடந்த இந்த கத்திக் குத்து சம்பவங்கள் தொடர்பாக Barking, Hammersmith மற்றும் Beckenham பகுதிகளில் இருந்து பொலிசாருக்கு அவசர உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள Barking பகுதியில் இரண்டு இளைஞர்கள் கத்திக் குத்துக்கு இரையானதாக உள்ளூர் நேரப்படி சுமார் 5.55 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்த பொலிசார், அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் 16 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டுள்ளனர்.

உடனடியாக அவர்கள் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன், இருவரையும் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

(Image: @maria16maria/Twitter)

இந்த விவகாரம் தொடர்பில் சம வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதே போன்று மேற்கு லண்டனில் இரு கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் இளைஞர்கள் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் 21 மற்றும் 19 வயது எனவும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எவரும் கைதாகவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மூன்றாவதாக Beckenham அருகே Churchfields சாலையில் சுமார் 8 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொலிசாரால் அந்த நபர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் நகரில் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்